20ஆவது திருத்தத்திற்கு எதிராக மனுக்கள் தாக்கல்?

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உயர்நீதிமன்றத்தில் பத்து மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இம்மாத அமர்வுக்காக, கிழக்கு மாகாண சபை எதிர்வரும் 29ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய அமர்வின் போதே, இந்தப் பிரேரனையை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் முன் வைக்கவுள்ளார். முன்வைக்கப்படவுள்ள அந்தப் பிரேரனையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் […]

Continue Reading

பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து புலிகள் அமைப்பு நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனை  ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்​தவொரு பாரதூரமான தாக்குதல்களை நடாத்தியதாக பதிவுகள் எதுவும் இல்லாதமையினால் அப்பட்டியலிருந்து நீக்கியதாக, அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், 2003ஆம் ஆண்டு இப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் பெயர் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ​ வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading

புலிகள் அமைப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்னும் குற்றம் சுமத்தப்பட்டவர்க்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற போது இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவர் கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீதுஇ கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர்இ தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் […]

Continue Reading