யாழில் பொலிஸார் மீது துரத்தித்துரத்தி வாள் வெட்டு!

வாள்வெட்டிற்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று (30) பிற்பகலுக்கு பிற்பாடு கொக்குவில், பொற்பதி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸார் என தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கிறது.

Continue Reading

சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் உயிரிழப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். நல்லூரில் நேற்று (22.07.2017) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த மெய்ப்பாதுகாவலர் படுகாயமடைந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்ட அவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

Continue Reading

யாழில் ஒருவகை மஞ்சல் திரவத்தினால் மாணவிகளின் மேனி சிவந்தன..

ஆகாயத்தில் இருந்து விழுந்த ஒருவகை திரவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் 18 பேரே இவ்வாற அணுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதிய நேர இடைவேளையின் போது மாணவர்கள் மைதானத்தில் நின்றிருந்த நேரம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆகாயத்தில் இருந்து தரை நோக்கி வந்த மஞ்சள் நிற திரவமொன்று மாணவிகளில் கைகளில் பட்டதினால் உடல் சிவந்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டு வைத்திய […]

Continue Reading

யாழிற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் அமைச்சர் நிலமைகளை அவதானித்துள்ளார்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருக்கும் இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவனும் கலந்துகொண்டார். இதன்போது வடக்கின் தற்போதைய சூழல் மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த குழுவினர் பணிப்பாளருடன் கலந்துரையாடியதோடு நோயாளர்களையும் சந்தித்த பேசியுள்ளார். யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்திருக்கும் சிங்கப்பூர் அமைச்சர்இ அங்கு ஒருதொகுதி […]

Continue Reading