உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவின் பூரி பிரதேசத்தில் இருந்து ஹரித்வார் பிரதேசத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த ரயில் தடம்புரண்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அரச தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் 60 குழந்தைகள் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள கோராக்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் கடந்த 02 நாட்களில் மாத்திரம் 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களில் அதிகமானோர் புதிதாக பிறந்த குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மருத்துவமனையில் ஒக்சிஜன் எனப்படும் பிராணவாயு வழங்கலில் இடம்பெற்ற தாமதமே இதற்கான காரணமென குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு உத்தரப் பிரதேச அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Continue Reading

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மலேரியா நுளம்புகள் பரவும் சாத்தியம் உள்ளதாக தெரிவிப்பு!

மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் எதிர்வு கூறியுள்ளார். 2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை நுளம்பு மீண்டும் இலங்கையில் மலேரியா நோய் பரவுவதற்கான அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் […]

Continue Reading

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கலந்து கொண்ட  கூட்டு கடற்பயிற்சி நிறைவு!

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினரின் கூட்டு கடற்பயிற்சி நேற்று முன்தினத்தடன் (17.07.2017) நிறைவு பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. வங்கக்கடலில் இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சி இரண்டு வருடடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வருகின்றது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இடம்பெறும் இப்பயிற்சிக்கு ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான பயிற்சி கடந்த 7 ஆம் திகதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துள்ளது. இறுதி தினத்தன்று சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 150 கடல் மைல் […]

Continue Reading

தமிழகத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழகத்தின் இராமநாதபுரம் குந்துகால் கடற்கரை பகுதியில், இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இராமேஸ்வரம் அருகே 06 கிலோ தங்கத்தை, இந்திய மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

தமிழகத்தில் 300 பேர் கைது!

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அஞ்சலி செலுத்த வந்த 300 பேரை, தமிழகப் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். குறித்த அஞ்சலி நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் மீறி, அஞ்சலி செலுத்தியமையால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு, அங்கு போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் பொலிஸார் அனுமதி வழங்குவதில்லை […]

Continue Reading

முருகன் தாயாரை சந்திக்க அனுமதி கோரி மனுத்தாக்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தனது தாயாரை சந்திக்க அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்யப் போவதாக அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். வேலூர் மத்திய சிறையில், முருகன் வைக்கப்பட்டுள்ள அறையில், அண்மையில் பொலிஸார் சோதனை நடத்தியதில், விலையுயர்ந்த இரு கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர், சிம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட யாரையும் மூன்று மாதங்களுக்கு சந்திக்க முருகனுக்கு அனுமதி […]

Continue Reading

படகு விபத்தில் 15 பேர் பலி – ஆந்திராவில் சம்பவம்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் ராமர் கோயில் ஏரியில் படகு கவிழ்ந்ததால் 15 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் அருகே உள்ளது ராமர் கோயிலில் கொடியேற்றும் விழா நடைபெற்ற போது, விழாவில் பங்கேற்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஒயிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 20 பேர் கொடியேற்ற விழாவைக் காண வந்திருந்தார்கள். விழா முடிந்ததும், அருகில் இருந்த ஏரியில் 15 பேர் படகு சவாரி செய்த சமயம், எதிர்பாராத விதமாக படகு […]

Continue Reading

குப்பைத் தொட்டியில் இலங்கை நாணயங்கள்

தமிழகத்தில் குப்பைத் தொட்டியில் கட்டுக்கட்டாக கிடந்த பெருந்தொகை இலங்கை நாணயங்களை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். பெசன்ட் நகரை சேர்ந்த உமா என்பவர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவரும் நிலையில், பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது, ஒரு பையில் கட்டுக்கட்டாக இலங்கை பணம் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 11 இலட்சத்து 89 ஆயிரம் ஆகுமென தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Continue Reading

தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கும் தமிழகம்

மோட்டார் சைக்கிள்களின் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுப்பது எப்படி என்ற தலைப்பில் நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் நேற்று இடம்பெற்ற விழிப்புணர்வு முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப்போது மோட்டார் சைக்கிள் விபத்துகளினால்தான் அதிகளவானோர் பாதிக்கப்படுவதாகவும், எனவே, ஹெல்மெட் அணிய வேண்டுமெனத் தெரிவித்துள்ளதாகவும் இதற்காக மேலும் அவகாசமளித்து திகதியை தள்ளிப்போட வேண்டுமென […]

Continue Reading

பிறநாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் இந்தியா

பிறநாடுகளைச் சேர்ந்த சுமார் 03 லட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கை, மியன்மார், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக இந்திய மத்திய அரசின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி குறிப்புக்களின் பிரகாரம் 28 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 89 ஆயிரத்து 394 அகதிகள் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அதில் உள்நாட்டுப்போர் காரணமாக இலங்கை அகதிகள் மட்டும் சுமார் ஒரு லட்சத்து […]

Continue Reading