ஷிரந்தி மற்றும் யோசிதவிற்கு CID அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரான யோசித ராஜபக்ஷ ஆகியோரை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காக, இவர்களை நாளைய தினம் (27) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாஜூதீனை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஷிரந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய நிறுவனத்தின் பயன்பாட்டில் இருந்தமை ஏற்கனவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்தோடு, தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் முன்னாள் […]

Continue Reading

பிணை முறி விநியோகம் குறித்து விசாரணையில் ரவி கரு கருணாநாயக்க..

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (26) முன்னிலையாகவுள்ளார். அமைச்சரை நேற்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அரச பணி நிமித்தம் தன்னால் ஆஜராக முடியாதென ஆணைக்குழுவிற்கு சட்டத்தரணியூடாக அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், விசாரணைகளை தொடர்ந்தும் ஒத்திவைக்க முடியாதென தெரிவித்துள்ள ஆணைக்குழு, இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள […]

Continue Reading

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் யாழ்.ஊடகவியலாளரிடம் விசாரணை…

யாழ். ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் குற்றப்புலனாய்வுப் துறையினர் இரண்டு மணிநேர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை யாழ். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (18.07.2017) இடம்பெற்றுள்ளது. இம்மாதம் 10ஆம் திகதியன்று, கொழும்பிலுள்ள குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் குறித்த ஊடகவியலாளர் விபத்திற்கு உள்ளான நிலையில் ஓய்வில் இருப்பதால் குற்றபுலனாய்வு பிரிவினர் யாழில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த மே மாதம் 8ஆம் திகதி யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் வாக்கு […]

Continue Reading