அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, புதிய தடைகளை விதிக்க முயற்சிக்குமாயின், தமது நாட்டின் அணு ஆயுத பலம் காண்பிக்கப்படுமென ஈரான் ஜனாதிபதி ஹாஸன் ருஹானி எச்சரித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஈரான் தமது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டிருந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஈரான் பரிசோதித்ததாக தெரிவித்து, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது. ஈரானின் நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறும் வகையில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், […]

Continue Reading

ஈரான் பாராளுமன்ற தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது ஹபாயா ஆடை

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குழுவொன்று ஈரான் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்துவதற்கு முஸ்லிம் பெண்கள் அணியும் முகமூடி ஹபாயா ஆடையைப் பயன்படுத்தியுள்ளதாக ஈரான் பிரதி உள்விவகார அமைச்சர் மொஹமட் ஹ{ஸைன் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த ஒருவர் பாராளுமன்றத்துக்குள்ளேயே குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் ஈரான் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Continue Reading