தடைசெய்யப்பட்ட வாளுடன் இளைஞர் கைது

தடைசெய்யப்பட்ட வாளொன்றினை வைத்திருந்த யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகருக்கு நேற்று மாலை கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள சந்தேகநபரின் வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்த போது தடைசெய்யப்பட்ட வாள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Continue Reading

யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தில் இருந்து 06 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கச்சேரி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழான புலனாய்வு பிரிவினர் கஞ்சா பொதியினை மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவரில் சிங்கள இனத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவரும், தமிழ் இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Continue Reading

கடலட்டையுடன் ஒருவர் கைது

150 கிலோ கடல் அட்டை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் விற்பனைக்காக கொண்டு சென்ற நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாச்சிக்குடா முழங்காவெளிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்.பண்ணை பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கடல் அட்டைகளை தீவகத்தில் இருந்து நாச்சிக்குடாவிற்கு கொண்டு செல்லும் போது பண்ணைப் பாலத்தடியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 150 கிலோ கடல் அட்டைகளும் பல லட்சம் பெறுமதியானவை. கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். […]

Continue Reading