வடக்கு பிரச்சினைக்குரிய தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்

வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதுடன், வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்கொட சிறிஞானரத்தின தேரர் தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட மகாநாயக்க தேரர் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சர்வமதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, மதப் பிரச்சினைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், போதைவஸ்து […]

Continue Reading

வடக்கு முதல்வர் – யாழ். மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ். மாவட்டப் பொலிஸ் உயரதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Continue Reading

தென்னிலங்கையில் இறந்தவர்களுக்காக யாழ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அஞ்சலி

தென்னிலங்கையில் உயிரிழந்த பொது மக்களுக்காகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்காகவும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாவட்டத்தின் 2017ஆம் ஆண்டின் இரண்டாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், தென்னிலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த பொதுமக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, […]

Continue Reading