முடங்கிய யாழ் நகரின் இன்றைய நிலமை இதுதான்

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் கடுமையான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால் நாட்டின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.. இந்நிலையில் யாழ் மாவட்டத்தின் அநேக பிரதேசங்கள் குறிப்பாக யாழ் நகரப்பகுதி உள்ளிட்ட இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி முடங்கிக் காணப்பட்டன. […]

Continue Reading

யாழில் 09 கடைகளை அகற்ற உத்தரவு

யாழ். நகர்ப் பகுதியின் மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகளை அகற்ற யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடை தொகுதியே இவ்வாறு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் கடைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading