செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விஞ்ஞானபீடம் மூடப்படும்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தினை இன்று பிற்பகல் முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதிவரை தற்காலிகமாக மூட யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடத்தில் கல்வி பயின்று வந்த விஜயரத்னம் விந்துஷன் (23) என்ற மாணவன் கோண்டாவில் விடுதியில் இருந்த போது டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த 20ஆம் திகதி உயிரிழந்ததுடன், விஞ்ஞான பீடத்தில் கல்விப் பயிலும் மேலும் 09 மாணவர்கள் டெங்கு நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை […]

Continue Reading

வவுனியா வளாகத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வுகள் நாளை நடைபெறவுள்ளன. வவுனியா வளாகத்தில் முதல்வர் த.மங்களேஸ்வரன் தலைமையில் காலை 10.00 மணிக்கு குறித்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே விஞ்ஞான, கணித பாடங்களில் நடத்தப்பட்ட புதிர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ள அதேவேளை, கடந்த 20 வருடங்களாக வவுனியா வளாகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதல்வர்கள், உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு மற்றும் கலை நிகழ்வு […]

Continue Reading