சுதந்திரமாக நடமாடுகிறார்களா..? குற்றச் செயல்களின் பொருப்பாளிகள்..

யாரை­யா­வது திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இவர்­கள் இப்­ப­டிச் செய்கிறார்­களா..? இந்த கேள்வியை வேறு யாரும் அல்ல இலங்கை ஜனநாயக சோஷசலிய குடியரசின் நீதிபதி ஒருவர் எழுப்பியிருக்கின்றார் என்றால் எங்கோ ஒரு இடத்தில் சறுக்கல ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க வேண்டும். அதுவும் நீதித்துறை வரலாற்றில் இருபது வருடங்களை சேவைக்காலங்களாக கொண்ட ஒருவர் யாழ். மேல் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள். இலங்கையின் புரையோடிப்போன சுமார் முப்பது வருடகால ஆயுதப்போராட்டங்களின் சரி பாதிக்கும் மேலான காலங்களை அவர் சட்டம் […]

Continue Reading

நல்லூர் தாக்குதலுக்கு வவுனியா மன்னாரில் கண்டணம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு வவுனியா மன்றும் மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) வவுனியாவில் அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி பஸார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்துஇ பின்பு அங்கிருந்து […]

Continue Reading

இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பில் மூன்று பேர் கைது!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் கோவில் வீதிப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதானவர்களில் இருவர் உடன்பிறந்த சகோதரர்கள் எனவும் மற்றயவர் அவர்களது ஒன்று விட்ட சகோதரர் எனவும் தெரிய வருகிறது. எனினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் பொலிஸாரினால் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

யாழில். இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நல்லூர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்றள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சார்ஜன் உட்பட இருவர் காயம். அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே குறித்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் சந்தேஅகிக்கப்படும் பிஸ்டல் நல்லூர் கோவிலுக்க அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு சென்றிருக்கும் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு […]

Continue Reading