நீதித்துறை: தவறு செய்யும் பாதுகாப்புப் படையினருக்கு தண்டனை வழங்கும்’

பல்வேறு தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். “பாதுகாப்பு​ப் படையினர் மேற்கொள்ளும் தவறுகளில், அரசாங்கம் இனி தலையிடாது. அவற்றை, நீதித்துறை பார்த்துக்கொள்ளும். “நம்முடைய பாதுகாப்புப் படையின் நற்பெயரைப் பாதுகாப்பது முக்கியமானது என்பதால், தவறு செய்யும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மாத்திரமே நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவேதான், இது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு, நீதித்துறையை நியமித்துள்ளோம்” […]

Continue Reading

நீதித்துறையை அடிபணிய வைக்க முடியாது என மல்வத்து பீடம் தெரிவிப்பு!

நல்லாட்சியில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டுமெனவும், ஆயுதங்களால் அச்சுறுத்தி அதனை அடிபணிய வைக்க முடியாதெனவும் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள மல்வத்து பீடம், உரிய விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. யாழ். நல்லூர் வீதியில் […]

Continue Reading