ஊர்காவற்துறையில் கர்ப்பிணி படுகொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் கர்ப்பிணித் தாயொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எல்.எம்றியாழ் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறையில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி கர்ப்பிணித் தாயொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

ஊர்காவற்துறையில் 3,000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு (Photos)

ஊர்காவற்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 3000 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் துருக்கி நாட்டினால் வழங்கி வைக்கப்பட்டன. துருக்கி நாட்டு அரசாங்கமும், மகளீர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. குறித்த நிகழ்வானது, யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா மற்றும் மகளீர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சின் செயலாளர் […]

Continue Reading