போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உறவுகள் அழைப்பு

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளை முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு, அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இன்று (29) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பை விடுத்துள்ளதுடன், நாளை சர்வதேச காணாமல் போனோர் தினமாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அனைத்து பொதுமக்கள், அமைப்புகள், அரசியல்வாதிகளையும் குறித்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகத் […]

Continue Reading

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் செயற்பாடுகள் இன்று ஸ்தம்பிதம்!

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் பணிகள் இன்று முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே இதற்கு கபரணமாகும். குறித்த சம்பவம் கடந்த 22ம் திகதி யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்றது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு வடக்கு மாகாண சட்த்தரணிகள் இப்பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. சட்டத்தரணிகள் […]

Continue Reading

மணல் விவகாரம் ;கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்னால் நேற்று (12) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நியாய விலையில் மணலை நியாய விலையில் மணல் வேண்டும். மணலுக்கு விலையா? மலைக்கு விலையா? எங்கள் மண் எங்களுக்கு இல்லையா? தருவதோ ஐந்தரை இலட்சம், மணலுக்கோ இரண்டு இலட்சம், சட்டவிரோத மணல் அகழ்வை தடு, நியாய […]

Continue Reading

பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி நகர்

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற இடங்களில் பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டம், இன்று செவ்வாய்க்கிழமை நூறாவது நாளாக இடம்பெறுவதை முன்னிட்டு சர்வமதப் பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. எங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்;;தோம். இப்போராட்டம் இன்று 100ஆவது நாளை […]

Continue Reading