சட்டவிரோத மண் அகழ்வால் நீர் வற்றும் நிலை

கிளிநொச்சி, வன்னேரிக் குளத்தின் பின் பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வின் காரணமாக குளத்தின் நீர் வேகமாக வற்றுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் குடியேற்றத் திட்டத்தில் கிராமத்தின் உயிர்நாடியாகக் காணப்படும் நிலையில், முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள இக்கிராமத்தில், 363 ஏக்கரில் ஆண்டு தோறும் பெரும்போகப் பயிர்ச்செய்கை இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு, கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளங்களின் வான் வெள்ளம், இக்குளத்தை நிரப்பும். வன்னேரிக்குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் மண்டைக்கல்லாறு வழியாக பூநகரிக் கடலில் கலக்கின்றது. […]

Continue Reading

தேங்காயில் தோன்றிய அம்மனின் கண்கள்

நயினாதீவு, நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும் படியாகவுள்ளது. குறித்த அதிசயம் கிளிநொச்சி, மருதநகரிலுள்ள சின்னப்பு, பொன்னம்மா என்பவரின் வீட்டில் நிகழ்ந்துள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில் எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில் அம்மனின் கண்கள் இருப்பதைக் கண்டு வியப்படைந்துள்ளனர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் வழியில் மருதநகர் பிள்ளையார் கோவில் முன்பாகவுள்ள வீதிக்கு அருகிலேயே சின்னப்பு, பொன்னம்மாவின் வீடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

போரினால் அழிவடைந்த பிரதேசங்களை வளம் மிக்கதாக மாற்ற வேண்டும்

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் (26) கிளிநொச்சியில் நடைபெற்றது. அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, குண்டசாலை பகுதியில் கரந்தகொல்ல என்ற இடத்தில் 2 வருடங்களுக்கு வேதனத்துடனான பயிற்சி இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். […]

Continue Reading

கிளிநொச்சியில் 24,000 குடும்பங்கள் பாதிப்பு

தற்போது நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 24,000 குடும்பங்களைச் சேர்ந்த 83,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான விஷேட கூட்டத்தின் போதே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், கரைச்சி பிரதேச செயலகத்திலுள்ள 42 கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் 9327 குடும்பங்களைச் சேர்ந்த 32632 பேரும், கண்டாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 16 கிராம அலுவலகர் பிரிவுகளில் 5767 குடும்பங்களைச் சேர்ந்த 20181 பேரும், பூநகரி பிரதேச செயலகத்தில் 19 […]

Continue Reading

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. கொள்கை பரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக்கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி குறித்து பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மாகாண சபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Continue Reading

சட்டத்தைக் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது – சுமந்திரன்

பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பொலிஸாருக்கு உரிமையுள்ளதாகவும், அதனை மீற அனுமதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, யாழில் இடம்பெறும் சட்டவிரோத மண் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து சட்டத்தை அமுல்ப்படுத்த பொலிஸாருக்கு […]

Continue Reading

கிளிநொச்சியிலும் சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லையென வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்களும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய நாம் நாளைய தினம் (இன்று) வடமாகாண ஆளுனரை சந்திக்கவுள்ளதாகவும், அவர் தமக்கு சுமூகமான பதிலை வழங்காத பட்சத்தில் தமது கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வு கிடைக்கும் அவரை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

வெற்றிச் சின்னத்திற்கு பலமான வேலி (Photo)

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிச் சின்னம் பலமான வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுகின்றது. குறித்த இராணுவ வெற்றியை குறிக்கும் நினைவிடம் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தின் எல்லைகள் பலப்படுத்தப்பட்டு பலமான வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் கிளிநொச்சி பனை, தென்னைவள தொழிலாளர்கள்

சட்டவிரோத கசிப்பு மற்றும் செயற்கை மதுபான விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னைவள தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவரும் நிலையில், 650இற்கும் மேற்பட்ட பனை தென்னைவள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் […]

Continue Reading

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு – 12 பேர் கைது

கிளிநொச்சி, கல்லாறு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை நேற்று தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நீண்டகாலமாக சட்டவிரோதமாக நடைபெற்றுவரும் இம்மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம், தருமபுரம் பொலிஸார் மற்றும் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் இணைந்து சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போதே, சந்தேகநபர்களை கைதுசெய்த பொலிஸார், மணல் ஏற்றிச் சென்ற வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். […]

Continue Reading

84ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 84ஆவது நாளாகவும் தொடர்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும், தமக்கான நியாயமான தீர்வு கிடைக்கும் வரை குறித்த போராட்டத்தை கைவிடப் போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஊர்வலம்

கிளிநொச்சியில் நேற்று (09) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அரும்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தினர் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதாநகர் மற்றும் நாச்சிக்குடா கிராம பெண்கள் ஒன்றிணைந்து பெண்கள் மற்றும் கிராமங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பில் மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். ஏனைய கிராமங்களில் உள்ளது போன்று தங்களது கிராமங்களின் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவித்து கிளிநொச்சி […]

Continue Reading