விரைவில் புதிய அரசாங்கம் உருவாகும்?

இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் தற்போது முன்நோக்கி செல்லக்கூடிய நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிடும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சிலரை தற்போதைய அரசாங்கம் தனது தேவைக்காக பயன்படுத்திவருவதாகவும் குமார் வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் அரசுடன் இணையவுள்ளனர்?

வருங்காலத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிரணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading