04 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

இலங்கையின் 04 மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளில், மண்சரிவு அபாயம் காணப்படுவதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவு, சரிவுகளில் விபத்து, மலையிலிருந்து கற்கள் விழுதல், நிலத்தில் பாதிப்புகள் ஆகியனவே இவ்வாறு எச்சரிக்கைகளாக வழங்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்திலுள்ள அகலவத்தை, புலத்சிங்ஹல, பிலின்தநுவர ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தோட்டை அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும்; இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட பிரதேச சபைப் பிரிவிலும் அதனைச் […]

Continue Reading

மண்சரிவை எதிர்நோக்கும் மாவட்டங்கள்

நாட்டில் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கையின் பிரகாரம், கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிந்து வீழக்கூடிய பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

2000 இடங்களைச் சோதிக்க அனுமதி

மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 2000 இடங்களை பரிசோதிப்பதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 750 இடங்கள் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மண்சரிவு சேவை கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

Continue Reading

726 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

மண்சரிவு ஏற்படலாமென சந்தேகிக்கப்படுகின்ற 726 இடங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்திலேயே மண்சரிவு அபாயம் அதிகளவில் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு தலைவர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளதுடன், மண்சரிவு அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மண்சரிவு அபாயம் நிலவும் இடங்களை அண்மித்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள், அந்த இடங்களிலிருந்து விரைவாக வெளியேற வேண்டும் எனவும் மண்சரிவு […]

Continue Reading