உள்ளூராட்சி சபைத் தேர்தல்: கட்சித் தலைவர்களுடன் விசேட சந்திப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இக்கூட்டத்தை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குறிப்பாக தேர்தல் நடைமுறைகள் மற்றும் கட்சிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக மேற்படி கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட இருக்கின்றது என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான சட்ட வரைபு விரைவில்! -ஜனாதிபதி சிறிசேன-

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான ஒழுங்குவிதிகள் குறித்த சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பிற்கான உள்ளுராட்சி நிறுவன திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் இடம்பெற்ற கருத்தமர்வில் அவர் இதனை அறிவித்தார். இலங்கை மன்ற கல்லூரியில் நேற்றைய தினம் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரையாற்றினார். அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அது உய்மையில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி […]

Continue Reading

புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பில் ஆளும் கட்சியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒருமனதாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். […]

Continue Reading