புலிகளின் பெயரால் வவுனியாவில் துண்டுப் பிரசுரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவிலுள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு எடுத்துள்ளனர். தமிழ்ப் பெண்களால் மேற்கொள்ளப்படும் பிழைகள் தொடர்பில், புலிகளின் புலனாய்வு பிரிவு அவதானித்துக் கொண்டிருக்கிறது என்றும், தமிழ்ப் பெண்கள், சிங்கள […]

Continue Reading

பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து புலிகள் அமைப்பு நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனை  ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்​தவொரு பாரதூரமான தாக்குதல்களை நடாத்தியதாக பதிவுகள் எதுவும் இல்லாதமையினால் அப்பட்டியலிருந்து நீக்கியதாக, அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், 2003ஆம் ஆண்டு இப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் பெயர் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ​ வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading

புலிகள் அமைப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்னும் குற்றம் சுமத்தப்பட்டவர்க்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற போது இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவர் கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீதுஇ கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர்இ தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் […]

Continue Reading