நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலை அரசுடமையாக்கும் அறிக்கை தயார்

சர்ச்சைக்குரிய மாலபே நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையை அரசுடமையாக்கும் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது குறித்த எழுத்துமூல ஆவணத்தில் தானும், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், எந்தவொரு நஷ்டஈடுகளுமின்றி, குறித்த வைத்தியசாலையை அரசுக்கு வழங்க வைத்தியசாலை அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

சைட்டம் தொடர்பில் மாற்றமில்லை

மாலபே சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லையென உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். மாலபே சைட்டம் நிறுவனம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி வழங்கிய தீர்மானங்களை அதே அடிப்படையில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசியல் தேவைகளுக்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading