யாரும் எனக்குக் கணக்குச் சொல்லித்தரத் தேவையில்லை – லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஏழு வருடங்கள் வங்கியொன்றில் பணிபுரிந்திருப்பதால் அரசியலில் இப்போது பிரவேசித்திருக்கும் கத்துக்குட்டிகள் தனக்கு கணக்கு சொல்லித்தரத் தேவையில்லையென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவிக்கும் போது, பிணைமுறி மோசடி விவகாரம் சரியான முறையில் கையாளப்படாவிட்டால் அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கைக்கு ஒரு ட்ரில்லியன் ரூபாவரை நஷ்டம் ஏற்படுமெனத் தான் தெரிவித்த போதிலும், ட்ரில்லியனுக்கும் மில்லியனுக்கும் வித்தியாசம் தெரியாத […]

Continue Reading

அமைச்சு உயர் அதிகாரிகளுக்கும் மாற்றம்??

எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதியின் தலையீட்டிற்கு அமைவாக, அமைச்சுக்கள் சிலவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கத்தை வலுவுடன் முன்நோக்கிக் கொண்டு செல்ல இதுபோன்ற மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை மாற்றத்தின் போது, சில பேதங்கள் இரு கட்சிகளுக்கு இடையிலும் இடம்பெற்று, அரசாங்கம் வீழுமென பலர் எதிர்பார்த்த போதிலும், இந்த மாற்றங்கள் மிகவும் வெற்றிகரமாக ஜனாதிபதி மற்றும் […]

Continue Reading