ஆண்டு விழாவில் பங்கேற்காதவர்கள் தொடர்பில் தீர்மானம்

66ஆவது வருட பூர்த்தி விழாவுக்கு சமூகமளிக்காதவர்கள தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய குழு இது குறித்து ஆராயவுள்ளதாகவும், சம்மேளனத்தை முடக்குவதற்கும் அதன் வெற்றியைத் தடுப்பதற்கும் திட்டமிட்டு இதில் கலந்து கொள்ளதாவர்கள் குறித்து கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சந்தர்ப்பமாக இதனைக் கருதுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் சம்மேளனத்தில் கலந்துகொள்ளாதோர் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் […]

Continue Reading

மீன்பிடித் துறைமுகங்களை விற்கப் போவதில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர

இலங்கையிலுள்ள எந்தவொரு மீன்பிடித் துறைமுகத்தையும் விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ போவதில்லையென கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சின் கீழ் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருப்பதாகவும் எதிர்காலத்தில் மேலும் சில துறைமுகங்களை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மஹிந்த அமரவீர, துறைமுகங்களை விற்கப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார். துறைமுகங்களின் செயற்திறனை மேம்படுத்தும் வகையில், தனியார் துறையின் பங்களிப்புடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், துறைமுகங்களை அண்மித்த பகுதிகளில் கடல்வளம் சார்ந்த […]

Continue Reading

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையா?

நீதிமன்ற மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது வெறும் செய்தியென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டதுடன், ரவி கருணாநாயக்க விலகிச் சென்றமை சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுடன், பண்டாரநாயக்கவுக்கு பின்னர் இதுவரை இவ்வாறான விலகிச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Continue Reading

அரிசிப் பற்றாக்குறை ஏற்படாது – மஹிந்த அமரவீர

நாட்டினுள் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட இடமளிக்கப் போவதில்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக தற்போது 25 சதம் மட்டுமே வரியாக அறவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோவை 75 ரூபாவுக்கும், பொன்னி சம்பா ஒரு கிலோ 72 – 75 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கோதுமை விதைக்கான இறக்குமதி வரி 9 ரூபாவில் இருந்து […]

Continue Reading

வேறு கட்சியில் இணையும் எண்ணமில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர

அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றால் ஒருபோதும் வேறு கட்சியுடன் இணைந்து கொள்வதில்லை என்றும், வேறு கட்சியின் வெற்றிக்காக செயற்பட போவதில்லை என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 11 உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைவதை தான் எதிர்பார்த்திருப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாகவும், சிலவேளை அதில் இருந்து விலகுவதாயின் அது மத்தியசெயற்குழுவின் தீர்மானத்தின் படியே அமையும் என்றும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

சவாலை எதிர்கொள்ளத் தயார் – அமைச்சர் மஹிந்த அமரவீர

அரசியலில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தாம் தயாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், வரும் சவால்களில் வெற்றி பெற்று வலுவுடன் முன்னோக்கிச் செல்வதே தனது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தனியாருக்கானது அல்ல ஸ்ரீ.சு.க – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி ஒருவருக்கோ அல்லது தனி ஒரு குழுவினருக்கோ சொந்தமான கட்சி அல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிகழ்காலத்தில் சில குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது குழுவுக்கு சொந்தமானது என்ற நினைப்பில் இருப்பதாக எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் […]

Continue Reading

மீன் இறக்குமதியை வரையறை செய்ய நடவடிக்கை

2020ஆம் ஆண்டாகும் போது மீன் இறக்குமதியை வரையறை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலத்தை அதிகப்படுத்தி நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதற்கு கடற்றொழில் துறையையும் இணைத்துக்கொள்ள முடியுமென தான் நம்புவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைவடைந்துள்ளன – அமைச்சர் மஹிந்த அமரவீர

அண்மைக் காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி சம்பவம், ஐம்பது சதவீதமாக குறைந்துள்ளதென கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையின் வசம் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டுமென அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று 42 படகுகளை விரைவில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்து இந்தியத் தூதரகத்துக்கு இந்தத் தகவலை வழங்கியுள்ள போதிலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டே படகுகள் […]

Continue Reading

பட்டதாரிகளுக்குப் பற்றாக்குறை – அமைச்சர் மஹிந்த அமரவீர

தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும்கூட வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading