இராணுவத்தினர் தொடர்பில் அரசின் துரித நடவடிக்கை அவசியம்

இராணுவத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானங்களுக்கு அடிபணியாது இராணுவ தரப்பைச் சார்ந்தவர்களின் கோரிக்கைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டுமென விஷேட தேவையுடைய படை சிப்பாய்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கொடுக்கல் வாங்கல்கள் இல்லை – முன்னாள் ஜனாதிபதி

தமக்கும் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கும் இடையில் எந்த கொடுக்கல் வாங்கல்களும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. இதில் பதில் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலேயே கொடுக்கல் வாங்கல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதைப் போன்றே, இதுவும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு […]

Continue Reading

இறைவரி சட்டமூலத்திற்கு மஹிந்த எதிர்ப்பு

ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டமூல வரைவை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நடைமுறையில் இருக்கின்ற 2006ஆம் ஆண்டு 10ம் இலக்க தேசிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் ஒன்று 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாகவும், அதனை எதிர்ப்பதற்கான சில காரணங்களையும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ?

2020இல் மஹிந்தவைப் பிரதமராக்கும் நோக்கோடுதான் மைத்திரிபால அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசிலுள்ள சிலர் புரியும் ஊழலால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேசிய அரசில் சுதந்திரக் கட்சி இணைந்துள்ள போதிலும், எமது கட்சி எந்தவோர் ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும், இவ்வாறான செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சியே ஈடுபடுவதாகவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மத்திய வங்கி ஊழல் எமது தேசிய அரசுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளதாகவும், […]

Continue Reading

கூட்டு எதிரணியினர் மஹிந்தவுடன் சந்திப்பு

கூட்டு எதிரணியிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, பிணை விநியோக மோசடி குறித்த முக்கியமான பல விடயங்களை வெளியிடவுள்ளதாகவும், தற்போது இந்த விடயம் குறித்த சிறிய அளவான […]

Continue Reading

மஹிந்த மீதான விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மிகவும் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருவதுடன், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் […]

Continue Reading

சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க தொடர்ந்து உழைப்போம் – ஜனாதிபதி

எத்தகைய நிந்தனைகள், குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தாலும் சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி எச் வலயத்திலுள்ள விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்ததுடன், ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகம், வீண்விரயம், உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டத்திற்கு சீராக கடத்தப்பட்ட யுகம் ஒன்று காணப்பட்டது. அவற்றை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போது பல பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். இவற்றை மாற்றுவது கடினம் என்றாலும் […]

Continue Reading

தனது வாக்குரிமையைப் பயன்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகத்துக்கு, ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, தான் வாக்களிக்கப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், நாடாளுமன்றத்தில் தனக்குள்ள வாக்குரிமையை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முதன்முறையாக பயன்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் 33 அங்கத்தவர்களால் கைச்சாத்திடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் […]

Continue Reading

வடக்கிலும் தெற்கிலும் முரணான கொள்கைகளைப் பின்பற்றும் ஆட்சியாளர்கள்

தற்போதைய ஆட்சியாளர்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கல்கிசையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று கொண்டனர். ஆனால், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம், குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்று […]

Continue Reading

யாழ். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

யாழில் இடம்பெற்ற  துப்பாக்கிச்சூட்டு  சம்பவத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக  ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால், சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு என்பதனை சிந்தித்து பார்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் […]

Continue Reading

மக்கள் மீதான வரிச் சுமை குறைக்கப்பட வேண்டும் – மஹிந்த

மக்களை கஷ்டத்திற்குட்படுத்தாமலே அரசாங்கம் வருமானம் ஈட்ட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மக்களின் ஒருவேளை உணவின் ஒரு பகுதி அரசாங்கத்திற்கு வரியாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இத்தகைய நிலைமை மாற்றப்பட்டு மக்கள் மீதான வரி சுமை குறைக்கப்பட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் மிலேச்சத்தனமான தாக்குதல் – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருத்துவ கல்வியின் எதிர்காலத்தை குணப்படுத்துவதற்கு மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மருத்துவர்களுடன் உடனடியாக கலந்துரையாடல் மேசையில் அமருமாறு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினருக்கு தாம் வலியுறுத்துவதாக இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் மிலேச்சத்தனமாக தாக்குதல் நேற்று மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த […]

Continue Reading