ஜனவரியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாமல் போகலாமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அதற்கான தேர்தலை நடத்த முடியுமெனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், டிசம்பர் மாதம் 12ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9ஆம் திகதி அரச பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். இதற்கான கோரிக்கையை பரீட்சைகள் ஆணையாளர் தம்மிடம் […]

Continue Reading

இளம் வாக்காளர்கள் வாக்களிப்புத் தொடர்பில் தெளிவடைதல் அவசியம்

வாக்களிக்கத் தகுதி வாய்ந்த இளம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிக்க அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பெரும்பாலான பிரதேசத்தில் கடந்த வருட பதிவுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 18 ஆயிரம் வாக்காளர்கள் மீள்பதிவு செய்யவில்லை எனவும், குறிப்பாக கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவ, கொலன்னாவ, மஹரகம மற்றும் கடுவல பிரதேசங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில், அரசியல்வாதிகள் அசமத்தனமான போக்கை கடைப்பிடிப்பதனாலேயே […]

Continue Reading

உள்ளூராட்சி தேர்தல் மதிப்பீட்டு சட்டமூலம் விரைவில் கையேற்கப்படும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மதிப்பீட்டு சட்டமூலத்தை சபாநாயகர் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க இன்னும் 10 நாட்களாகுமென அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதன்படி, 75 அல்லது 100 நாட்களுக்கு பிறகு தேர்தலை நடாத்த முடியும் என்ற போதிலும், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஓக்டோபர் மாத முதல் வாரம் வரை இடம்பெறாது எனவும், இந்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் டிசம்பர் மாதம் சாதாரணதர பரீட்சையின் பின்னர் இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் […]

Continue Reading

வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்தவும்

2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் தத்தமது பெயர்கள் இல்லாத பட்சத்தில் உடனடியாக அறிவிக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக இருபற்றி தேர்தல் காரியாலயத்திற்கு அறியத்தர முடியும் எனவும், இந்தநிலையில் திருத்தப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல்கள் தேர்தல்கள் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

தேர்தல்களை தள்ளிப் போடும் சூழ்ச்சியில் நல்லாட்சி அரசாங்கம்!

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளையே நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப் படுத்துவதாக சம சமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாட்டின் உரிமை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தற்போதைய அரசு இல்லாது செய்துள்ளது. பொருளாதாரத்தினை எமக்கு ஏற்றாற்போல் நடைமுறைப்படுத்தாமல் சர்வதேச நாடுகளிடம் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ விதாரண இந்த கருத்துக்களை முன்வைத்தார். நாட்டில் குறிக்கப்பட்ட தினங்களில் தேர்தல்களை நடத்துவது பிரதானமாகும். ஆயினும் தற்போதைய […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒக்டோபர் மாதமளவில் நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், ஜூலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளதுடன், தேர்தல்களை ஒழுங்கு செய்வதற்கு குறைந்தபட்சம் 75 நாட்களாவது தேவைப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அனர்த்த பிரதேசங்களில் வாக்காளர் இடாப்புத் திருத்தும் பணிக்கு காலநீடிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாக்காளர் பெயர் பதிவு இடாப்பு மீள்திருத்தம் செய்யும் நடவடிக்கைக்கான காலத்தை மேலும் நீடிப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வாக்காளர் பெயர் பதிவு இடாப்பின் மீள்திருத்தத்திற்கு தேவையான படிவங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற மாவட்டங்களில் இந்தக் காலம் நீடிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை […]

Continue Reading

மெகோ என்பதற்கு நான் பொறுப்பல்ல – மஹிந்த

நாட்டு மக்கள் எனக்கொரு பெயர் வைத்துள்ளனர். அதாவது, தேர்தல் நடத்தாத ‘மெகோ’ அந்த பெயருக்கு நான் பொறுப்பல்லவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை 2012ஆம் ஆண்டு மாற்றிவிட்டனர். ஆகையால், அந்தச் சட்டம் 2013ஆம் ஆண்டே அதிகாரத்தை இழந்துவிட்டது. இதனிடையே, எல்லை நிர்ணய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்தன. உள்ளூராட்சி மன்றச் சட்டமானது, அதிகாரத்துடன் இருந்திருக்குமாயின், பழைய முறையிலேயே தேர்தலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எல்லை […]

Continue Reading