நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக மக்கள் தெளிவுபடுத்தப்படுவர் – முன்னாள் ஜனாதிபதி

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் எதிர்பார்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றாரா இல்லைய என்பதல் முக்கியம், அவர் இலஞ்சம் பெற்றுக் கொண்டாரா என்பதேயென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Continue Reading

யுத்தத்தினாலேயே குப்பைகளைக் கவனிக்கவில்லை – வருத்தம் தெரிவித்த மஹிந்த

யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பைமேட்டை அப்புறப்படுத்த முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஆட்சிக் காலத்தின் இறுதியில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading