மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை அனுமதி

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த காலத்தில் நிதி பெற்றுக் கொள்ளப்பட்டமைக்கான உரிய ஆவணங்களை வெளிப்படுத்தாமல் பொரளை, கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக 27 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் […]

Continue Reading

பிணையில் விடுவிக்கப்பட்டார் மஹிந்தானந்த

39 இலட்சம் ரூபா நிதி மோசடி உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, 20 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் அவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மஹிந்தானந்தவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Continue Reading