படையினர் மீது கைவைக்க அனுமதியில்லை – ஜனாதிபதி

எந்தவொரு தரப்பினராயினும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொரளை, ஹெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை அளித்ததுடன், சங்கீத நாட்காலி போட்டிக்கோ, விநோத போட்டிகளுக்காகவோ தாம் ஒன்றிணைந்த கூட்டு அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பிரச்சினை தொடர்பாக […]

Continue Reading

பொறுமை காக்குமாறு தமிழர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தம்முடன் பொறுமையாக இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் ஜனாதிபதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும். ஆனால் இதற்கு காலநிர்ணயத்தை மேற்கொள்ளும் விடயத்திலேயே படைத்தரப்பினரால் உறுதியாக எதனையும் கூற முடியாத நிலை இருக்கின்ற போதிலும், மீள்குடியேற்றம் மற்றும் […]

Continue Reading

கொழும்பு துறைமுகத்தின் எந்தவொரு பகுதியும் விற்கப்படமாட்டாது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு தரப்பிற்கும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த பகுதி எந்தவொரு தரப்பிற்கும் விற்கவோ குத்தகைக்கு விடப்படவோமாட்டதென ஜனாதிபதி தெரிவித்துள்ள இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

Continue Reading

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த உலர் உணவுப் பொருட்களை விரைவாக உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அப்பிரதேச மக்களுக்கான குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதி நவீன போர்க்கப்பல் விரைவில் ஜனாதிபதியால் கையளிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலை  எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படையில் 67 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட யுத்தக் கப்பலாகும். இதேபோன்று இந்தியாவில் வெளிநாட்டு கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட பாரிய யுத்த கப்பலாகவும் இது அமைந்துள்ளது. கடற்படையினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் கோவா கப்பல் தயாரிப்புப் பிரிவில் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக்கான கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை […]

Continue Reading

நாட்டு மக்களின் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்க தயார்!

மக்களின் நலனை உறுதி செய்ய எடுக்கக்கூடிய உச்சகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இப்பாகமுவ அல் ஹமதீயா பாடசாலையில் (26) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு சில ஊழியர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை பற்றி தெரிந்து கௌ்ளாது செயற்படுகின்றனர். ஒரு அங்குலம் காணியையேனும் வெளிநாட்டவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போவதில்லை என உறுதியிட்டு கூறுகின்றேன். புரிந்துணர்வின் […]

Continue Reading

இந்தியாவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி  சிறிசேன வாழ்த்து!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராம் நாத் கோவிந்த்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோவிந்த்திற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். ‘உங்களது அறிவும் ஆட்சித் திறனும் சுபிட்சத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். இந்த […]

Continue Reading

எத்தகைய உதவியானாலும் செய்யத்தயார் – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்காக தமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லையென பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார். பங்களாதேஷ் நாட்டுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை டாக்கா நகரில் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த விஜயம் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை – பங்களாதேஷ் உறவின் மைல் கல்லாகும் எனவும் […]

Continue Reading