சமுர்த்தித் திட்டம் செழுமைப்படுத்தி முன்னெடுக்கப்படுகிறது – ஜனாதிபதி

சமுர்த்தித் திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சமுர்த்தி திட்டத்தை கட்டியெழுப்புவதற்காக சிறந்த பங்களிப்பு வழங்கியிருப்பதாக நேற்றைய தினம் தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற “சமுர்த்தி சமூகம் 2017” தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சமுர்த்தி திட்டம் வெற்றியளிக்காத வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதனை வெற்றித் திட்டமாக மாற்றுவதற்கு துறைசார்ந்த அனைவரினதும் அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பை […]

Continue Reading

பொலித்தீன், பிளாஸ்டிக் தடையில் மாற்றமில்லை

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற பரிசீலனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தை முறையாக மற்றும் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியை வகுக்கும் பொறுப்பு சுற்றாடல் […]

Continue Reading

07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை ஆதரிக்கத் தீர்மானம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் 66ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ள சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலாளர்களினால் காணித் தேவை மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் குறித்த தகவல்கள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பதிவுகளுக்காக முடிந்தளவு அரச காணிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அரச காணிகள் […]

Continue Reading

வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை

வெள்ள நிலைமை மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் மீண்டும் நிர்மாணிக்கத் தேவையான வேலைத் திட்டங்களை விரைவாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றின் போதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகள், பாடசாலைகள், மின் விநியோகம் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற அனைத்துத் தரவுகள் குறித்த அறிக்கையையும் விரைவில் தனக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, புதிய வீடுகளை […]

Continue Reading

அனர்த்தத்தினால் உடமைகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி ஆலோசனை

அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான வீடுகளுக்காக நஷ்டஈடு வழங்குவதற்கும், வீடுகளில் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும், உயிரிழந்த நபர்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்வதற்கும் தேவையான ஆலோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணமளிப்பதற்காக 150 மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப எல்லா நேரங்களிலும் மேலதிக நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், தற்போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நிவாரண […]

Continue Reading

நாட்டின் இன்றைய நிலை தொடர்பில் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

அவசர அனர்த்த நிலைமைகளை கேள்வியுற்று தான் மிகுந்த கவலையடைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிலிருந்து ட்விட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளதுடன், அனர்த்தத்தை எதிர்நோக்கிய பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறும் அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Continue Reading

அதிகாரத்தைக் கைப்பற்றவே பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி

அதிகாரத்தில் இருந்த சிலர் தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற தாய்நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை நேற்று கென்பரா நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், உண்மையை விடவும் பொய் வேகமாக பரவக்கூடியது. எனவே அவ்வாறான பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாமெனவும் உலக வாழ் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு அமர்த்திய இலங்கை மக்களின் எதிர்பார்ப்பை உயர்ந்தபட்சம் […]

Continue Reading