சியரா லியோனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்

சியரா லியோனில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தின் ஊடாக அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். சியரா லியோனில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரையில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதுடன், 600ற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மீட்புப் பணிகளுக்காக அனைத்து அமைப்புகளிடமிருந்தும் அந்நாட்டு ஜனாதிபதி உதவி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

லண்டன் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

லண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட்டுள்ளார். இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு கொடூரமான செயல், இந்த தாக்குதல் காரணமாக லண்டனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தற்போது வரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இந்த தாக்குதலினால் லண்டனில் வாழும் […]

Continue Reading

நாட்டுக்குக் கொண்டுவரப்படும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்ய நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வை செய்து நாட்டுக்கு பொருத்தமானவற்றை மட்டும் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, 2017ஆம் ஆண்டில் நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டாகும்போது 15,000 கிராமங்களில் […]

Continue Reading

மலேஷிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த மைத்திரிபால

இலங்கையின் முதலீடுகள், வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக மலேஷிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். மலேஷியாவின் பிரபல எரிபொருள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமாதான சூழல், வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருத்தமானது. எனவே உலக அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்தால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமையுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading