பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது – மல்லாவியில் சம்பவம்

நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் சில வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக கெஸ்பேவ மற்றும் ஹோமாகம நீதவான் நீதிமன்றங்களில் ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீகொடை மற்றும் தெல்தொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

மல்லாவி வைத்தியசாலையில் தாக்குதல் – நால்வர் படுகாயம்

வாள்வெட்டுக்கு இலக்காகி, மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த இருவர் மீது, வைத்தியசாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் 04 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில், மல்லாவி பொலிஸ் பிரிவிலுள்ள கல்விளான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும், திருநகர் கிராம இளைஞர் குழுவுக்கும் இடையில் நீண்டகாலமாக பகை நிலவி வந்ததாகவும், இரண்டு தரப்புக்கும் […]

Continue Reading