39 நிறுவனங்கள் மாத்திரமே இலாபமீட்டுகின்றன – நிதியமைச்சர்

அரசாங்கத்திற்கு வருவாய் பெற்றுக்கொடுக்கும் முக்கிய 55 நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் மாத்திரமே லாபமீட்டுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க நிர்வாகத்தின் கீழ் 400 அரச நிறுவனங்கள் உள்ள நிலையில், அவற்றில் முதன்மையான 55 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் தொடர் நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய 345 நிறுவனங்களும் வருவாய் நோக்கில் இயங்காதவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

அரசு சரியான பாதையில் பயணிக்கிறது – மங்கள சமரவீர

மனித உரிமைகளை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசாங்கம் பொறுப்பேற்றப்போது இலங்கையில் பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் என்பன பெரும் சவால்களாக இருந்ததாகவும், தற்போது இந்த விடயங்கள் சரியான முறையில் அணுகப்பட்டுள்ளதுடன், இன்னும் பல செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பினும், தற்போது அரசாங்கம் சரியான பாதையில் செல்வதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது

ஊடக சுதந்திரத்தை ஊடகவியலாளர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாதென ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்களை சட்டத்திட்டங்களின் ஊடாக கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், ஒழுக்கமான ஊடகவியலாளர்களை உருவாக்குவது முக்கியமானது. முன்னைய அரசாங்கம் பல்வேறு கடுமையான சட்டங்களை அமுலாக்கி ஊடகங்களை இறுக்கி, சுதந்திரத்தை இல்லாமல் செய்திருந்த போதிலும், தற்போது அவ்வாறான தடைகள் […]

Continue Reading

இனவாதத்தைத் தூண்டுபவர்களுக்கு யாரும் துணைபோகக் கூடாது – அமைச்சர் மங்கள சமரவீர

இனவாதத்தை தூண்டும் விதத்தில் செயற்படும் எவருக்கும் இந்நாட்டின் உண்மையான பிரஜைகள் துணைபோக கூடாதென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் யாழ் வல்வெட்டித்துறையில் அமைக்கப்படவுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையின் ஊடாக இந்தியாவின் கோடிக்கரையை நீந்தி கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல்தடாகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ். […]

Continue Reading