முன்னாள் போராளிகள் – பொலிசார் மோதல் – மன்னாரில் சம்பவம்

மன்னார் அடம்பன் ஆள்காட்டிவெளி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுகையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வடமாகாண ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமையில் மன்னார் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் இன்று […]

Continue Reading

மன்னாரில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே மின்கட்டணப் பட்டியல்

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே மின்கட்டணப் பட்டியல் கிடைப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னாரின் ஆண்டான்குளம், ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்வாசிப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே வருகை தருவதாகவும், இதனால் தமக்கு பெருந்தொகை பணத்தை ஒரே தடவையில் செலுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் இலங்கை மின்சார சபைத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கில் மின்வாசிப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் விரைவில் மின்மானி வாசிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்கு […]

Continue Reading

மன்னாரில் மீட்கப்பட்டன சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பாதுகாப்புத்தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் இருந்து இவை இன்று மீட்கப்பட்டுள்ளன. அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இநந்pலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளினால் குறித்த வெடி பொருட்கள் கடந்த காலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மீட்கப்பட்ட […]

Continue Reading

அபிவிருத்தியை முன்னிறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்

மன்னார் நகரில் மணிக்கூட்டு கோபுரம் நிர்மாணித்தல், பிரதான நுழைவாயில் நிர்மாணித்தல் போன்ற 14 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நகர பிரதான சந்தியில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்ற நிலையில், இந்த கையெழுத்து வேட்டை பிரதிகள் வடமாகாண முதலமைச்சர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Continue Reading

நல்லூர் தாக்குதலுக்கு வவுனியா மன்னாரில் கண்டணம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு வவுனியா மன்றும் மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) வவுனியாவில் அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி பஸார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்துஇ பின்பு அங்கிருந்து […]

Continue Reading

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் செயற்பாடுகள் இன்று ஸ்தம்பிதம்!

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் பணிகள் இன்று முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே இதற்கு கபரணமாகும். குறித்த சம்பவம் கடந்த 22ம் திகதி யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்றது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு வடக்கு மாகாண சட்த்தரணிகள் இப்பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. சட்டத்தரணிகள் […]

Continue Reading

சுற்றுலா மையமாக மாறவுள்ள வடகிழக்குக் கடற்கரை

மன்னார் மாவட்டத்தின் வடகிழக்கு கடற்கரையை அண்டிய பகுதியிலுள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரவித்துள்ளது. குறித்த பகுதியின் கடற்பரப்பை சுற்றுலாத்தள மையங்களாக மாற்றுவதற்கு ஏற்கனவே 40 மில்லியம் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளதுடன், சுற்றுலத்துறையில் உண்மையான அனுபவம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாக் கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Continue Reading

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

மன்னார், சவுத்பார் கடற் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மத்திய கடற்படை முகாமில் பணியாற்றும் குழுவினர் மற்றும் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் நேற்று இவர்களைக் கைது செய்துள்ளனர். இதன்போது தடைசெய்யப்பட்ட 04 வலைகள், டைவிங் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 06 முகமூடிகள் மற்றும் 2210 கிலோகிராம் மீன்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 07 மீனவர்களும், பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் […]

Continue Reading

மன்னாரில் வனஜீவராசிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் சூறையாடப்படுகிறது

04 லட்சத்து 94 ஆயிரத்து 494 ஏக்கர் அளவைக் கொண்ட மன்னார் மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிடியில் 03 லட்சத்து 70 ஆயிரத்து 822 ஏக்கர் நிலம் உள்ளதாக திணைக்களங்களின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டமானது மொத்தமாகவே 2002 சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட ஓர் மாவட்டம். ஓர் சதுரக் கிலோமீற்றர் என்பது 247 ஏக்கர் என்பதன் அடிப்படையில் மாவட்டமே மொத்தமாக 04 லட்சத்து 94 ஆயிரத்து 494 ஏக்கர் அளவை […]

Continue Reading