நாடு இல்லை என்பதற்காக நாம் நாதியற்றவர்களல்ல – அமைச்சர் மனோ கணேசன்

நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு செம்மொழி மாநாட்டை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்து விடாதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமானால் தமிழர்கள் […]

Continue Reading

காணாமற் போனவர்களைக் கண்டறியும் அலுவலகம்

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படுமென தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதும் காரியாலயத்தை ஸ்தம்பிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கையில் போர்க் குற்ற விசாரணை உண்டு – அமைச்சர் மனோ

இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்பதால், இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் அமைச்சர் மனோ கணேசன் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாதென அரசாங்கத்தின் தலைமை […]

Continue Reading

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விஷேட அமைச்சரவைப் பத்திரம்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பிலான விஷேட அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அது பற்றிய தீர்மானங்கள் எட்டப்படும் எனவும், தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுமென அதன்பின்னர் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் […]

Continue Reading