யுத்தம் முடிவடைந்தாலும் பிரச்சினைகள் முடியவில்லை – அமைச்சர் மனோ கணேசன்

இந்த நாட்டில் யுத்தம் முடிந்துள்ளதாக கூறப்பட்டாலும் அந்த யுத்தத்திற்கான மூலம காரணம் அப்படியே உள்ளதுடன், அதற்கு எந்த முடிவும் காணப்படவில்லையென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை நேற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று ஆரம்பமானது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே […]

Continue Reading

நுவரெலியாவில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில், நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இது தொடர்பில், ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சரிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

3,300 மொழி அலுவலர்களுக்கு நியமனம்

சகல அரச நிறுவனங்களிலுமுள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மொழி அலுவலர்கள் 3,300 பேர் நியமிக்கப்படவுள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். மொழிகள் அமுலாக்கல் திட்டத்தை அமுல்படுத்தாமையானது, தேசிய நோயாக உள்ளதாகவும், அந்த நோயுள்ள இடத்தை அறிந்து அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். அரச திட்டங்கள் பலவற்றில் மக்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் தனிச் சிங்கள மொழியில் இருப்பதால் அவற்றை உள்வாங்கிக் கொள்வதில் எமது மக்களுக்கு […]

Continue Reading

ஜனாதிபதி – ஐக்கிய தேசிய முன்னணி சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றிரவு சந்திக்கவுள்ளது. இரவு 9.00 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதுடன், தேர்தல்கள் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு – மனோ கணேசன்

புதிய அரசியலமைப்பை இம்மாத இறுதிக்குள் தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்படி, அரசியலமைப்பு வழிநடத்தல் குழு அடுத்து வரும் வாரங்களில் கூடவுள்ளதாகவும், நான்கு நாட்களுக்கு தொடர்ந்தும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading