மாவையிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 06 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால், நேற்று (22) உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவியின் கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் […]

Continue Reading

பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படாதவர் மாவை சேனாதிராஜா

பதவி, பட்டங்களை தான் ஒருபோதும் விரும்பியதில்லை. தமிழினத்தின் விடுதலையே எமக்கு வேண்டும் என்பதுடன், அந்த விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 13ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு, யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், நாம் பண்பாடுள்ளவர்களாகவும், நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே, பல இலட்சக்கணக்கான உயிர்களை எமது இனம் பறிகொடுத்தது. இதற்காகத்தான் இன்றும் போராடிக் […]

Continue Reading

எதிர்க்கட்சித் தலைவர் – வடமாகாண முதலமைச்சருக்கிடையிலான சமரசத்தை ஏற்கிறோம் – தமிழரசுக் கட்சி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சமரசத்தை இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்காக செயற்பட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பின் பின்னர் மாவை சேனாதிராஜா ஊடங்களுக்குக் […]

Continue Reading

ஐ.நா மனித உரிமைகள் உறுப்பு நாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் – மாவை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்பு போராட்ட மக்களின் கோரிக்கைகள் வெற்றி பெற நாளைய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு அளிப்பதுடன், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை குறுகிய காலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் உறுப்பு நாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நாளை (27) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிராக போராடிவரும் தாய்மார்கள் வடகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு […]

Continue Reading