மீதொட்டமுல்ல மக்களுக்காக விரைந்து செயற்பட்ட தென்னிலங்கை அரசாங்கம்

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த வீடுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 50 ஆயிரம் ரூபா நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Continue Reading

குப்பைமேடு தொடர்பில் மற்றுமொரு கூட்டம்

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மற்றுமொரு கூட்டம் நடைபெறவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்றுஇக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் நிதி அமைச்சு, கொழும்பு நகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாவட்ட செயலகம் உள்ளிட்டவற்றில் கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மீதொட்டமுல்ல குப்பைமேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிவாரண உதவிகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது ஆரயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

மீதொட்டமுல்லை சென்றார் பிரதமர்

மீதொட்டமுல்லை அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். இன்று முற்பகல் 11.00 மணியளவில் இவர் அப்பகுதிக்குச் சென்றுள்ள அதேவேளை, மீதொட்டமுல்லை பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட இலங்கை கிரிக்கெட் அணியினரும் இன்று அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading