அனர்த்தம் குறித்து ஆராய சந்திரதாஸ நியமனம்

மீதொட்டமுல்லை குப்பைமேடு அனர்த்தம் குறித்த விசாரணைகளுக்காக, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரதாஸ நாணயக்கார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading

டெரன்ஸ் பாடசாலை 02 நாட்களில் ஆரம்பம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள டெரன்ஸ் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 02 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார். பாடசாலையை துப்புரவு செய்ததன் பின்னர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென மாவட்ட செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, வீடுகள் வழங்கப்படாத 140 பேருக்கு தலா 50,000 ரூபா கொடுப்பனவு கொடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர், இன்றைய தினமும் மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading