சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்த கூடாது

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமது சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்த கூடாது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் (29) இடம்பெற்றபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தற்போது வரை நடந்து முடிந்துள்ள அபிவிருத்திகள் மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் […]

Continue Reading

மிலேனியம் குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரரை சந்தித்துள்ளனர்@

மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், அதன் பிரதி தலைவர் தலைமையிலான குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். இந்த நிகழ்வு நாடாளுமன்ற கட்டடதொகுதியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் சாத்தியமான முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, நிதி அமைச்சின் பொருளாதார ஆலோசகர் டிசால் டி மெல்லும் இதில் கலந்துகொண்டனர்.

Continue Reading

நீதித்துறை: தவறு செய்யும் பாதுகாப்புப் படையினருக்கு தண்டனை வழங்கும்’

பல்வேறு தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். “பாதுகாப்பு​ப் படையினர் மேற்கொள்ளும் தவறுகளில், அரசாங்கம் இனி தலையிடாது. அவற்றை, நீதித்துறை பார்த்துக்கொள்ளும். “நம்முடைய பாதுகாப்புப் படையின் நற்பெயரைப் பாதுகாப்பது முக்கியமானது என்பதால், தவறு செய்யும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மாத்திரமே நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவேதான், இது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு, நீதித்துறையை நியமித்துள்ளோம்” […]

Continue Reading

நீதியமைச்சர் நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக அரசியல் கைதிகள் குற்றம் சாட்டுவதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பு- மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தாம் சந்தித்த போது அவர்கள் தெரிவித்தாக அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதி இருக்குமாயின் அதற்கு உட்பட்டு அரசியல் தீர்மானம் ஒன்றின் பேரில் தம்மை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம், அரசியல்வாதிகள் என அனைவராலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சமய […]

Continue Reading