பாடசாலைகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சு அறிவுறுத்து

டெங்கு நுளம்புகள் இல்லாத பாடசாலை வளாகத்தை பராமரித்துச் செல்வதற்காக மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, செப்டெம்பர் மாதம் 03, 04 மற்றும் 5ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் செயற்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Continue Reading

உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் செய்தி

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் அடுத்த கல்வி தவணை ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒதுக்கீடுகளின் பிரகாரம், இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்கமைய ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கும் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் இந்த டெப் கணனிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெப் கணனிகள் ஊடாக பாட விதானத்துக்குட்பட்டதும், அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளுக்குள் சென்று கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Continue Reading

2018இல் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளைச் சேர்க்கும் சுற்றுநிருபம் வெளியாகியது

2018ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான அடிப்படைத் தகைமைகளின் பிரகாரம் முதலாம் தரத்தின் சமாந்தர வகுப்பொன்றிற்காக மொத்தம் 38 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களின் ஐந்து பிள்ளைகள் யுத்த நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்ட முப்படைகள், பொலிஸ் உறுப்பினர்களின் […]

Continue Reading