65 வீதமானவர்கள் தொற்றாநோயால் உயிரிழப்பு

தொற்றாநோய் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய் மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் காரணமாக உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாந்தி குணவர்தன, மோசமான சுகாதார பழக்கம் மற்றும் தவறான உணவு முறையே இதற்கான காணரம் என்பதுடன், உடல் பருமன் அதிகரிப்பதும் அதிக நோய்களுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

டெங்கைக் கட்டுப்படுத்த ஆஸி. பக்டீரியா

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பக்டீரியாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பக்டீரியா மூலம் டெங்கு நுளம்பின் விஷத் தன்மையினை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும் எனவும், இந்த பக்டீரியாவானது தற்போது வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பக்டீரியாவானது விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட முடியும் என இதுதொடர்பில் ஆய்வு நடத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் மொனெஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். […]

Continue Reading