மோரா புயலின் தாக்கம் நாளை குறைவடையும்

மோரா புயல் பங்களாதேஷ{க்குள் புகுந்துள்ளதால் நாளை (31) முதல் இலங்கையில் மழைவீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் என்பன குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. எவ்வாறாயினும், இன்றைய தினம்,இலங்கையின் வான்பரப்பு கருமேகங்களால் சூழ்ந்துள்ள நிலையில், இன்று இரவும் மழை மற்றும் கடும் காற்றை எதிர்ப்பார்க்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

கரையைக் கடந்தது மோரா

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மோரா புயல் இன்று காலை 6.00 மணியளவில் மணிக்கு 117 கிலோமீற்றர் வேகத்தில் கரையைக் கடந்தது. பங்களாதேஷின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே உள்ளூர் நேரப்படி காலை 6.00 மணிக்கு புயல் கரையைக் கடந்ததாக அந்தநாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வேறு இடங்களுக்கு அதிகாரிகள் அப்புறப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading