முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் பலி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 03 பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியும் நேருக் நேர் மோதி நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

வீட்டுத்திட்டம் வழங்குமாறு ஒட்டுசுட்டானில் போராட்டம்!

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இதுவைரையில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2017) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுலன்புரி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்றையும் கையளித்துள்ளர்.

Continue Reading

கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இன்று விடுவிப்பாம்!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் ஒரு தொகுதி காணி இன்றைய தினம் (19.07.2017) விடுவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதனை மேற்கோல் காட்டி இத்தகவல் வெளியாகியுளள்து. காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருப்தாக தெரிகிறது. கேப்பாப்பிலவில் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கேப்பாப்புலவு பகுதியில் 279 ஏக்கர் காணிகள்; […]

Continue Reading

ஒட்டுசுட்டானில் யானைகளின் தொல்லை அதிகரிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ஆம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படுமென அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும் யானைகளின் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். பயன்தரு தென்னை, பலா மா மரங்கள் உட்பட அனைத்து மரங்களையும் யானைகள் மாலை 4.00 மணியளவில் […]

Continue Reading

நீரின்றி முல்லைத்தீவு மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம், நன்னீர் மீன்பிடி, நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர்மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இக்குளங்களை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேலான நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்கின்ற வரட்சி காரணமாக பல குளங்களின் நீர் […]

Continue Reading

சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவில் இனப் பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முள்ளியவளை, ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான்காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட அடர்வனத்தைக் குறிக்கும். இந்தக் காட்டில் 177 ஏக்கரை அழித்து மக்களை குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை […]

Continue Reading

முல்லைத்தீவில் முஸ்லிம்கள் அத்துமீறல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு பகுதியிலுள்ள வனப் பிரதேசத்தினுள் 150 ஏக்கரில் 300 முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் இன்றைய தினம் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணியற்ற முஸ்லிம் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்காக மட்டும் இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு ஓர் அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இரகசியமான முறையில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,182 தமிழ் மக்களுக்கும், 907 முஸ்லிம் மக்களுக்கும் காணி இல்லையென இனங்காணப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஒரே […]

Continue Reading