இளம்பெண் படுகொலை

இளம் தாயொருவரின் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊவா பரணகம, திம்புலன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், ஊவா பரணகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

கலிபோர்னியாவில் மூவர் கொலை

அமெரிக்கா கலிபோர்னியாவில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட கோரி அலி முஹம்மது என்ற நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவின் பிரென்ஸ்கோவில் நேற்று (18) இந்தத் தாக்குதல் இடம்பெற்றதுடன், இதன்போது மேலுமொருவர் காயமடைந்துள்ளார். எவ்வாறாயினும், இதுவொரு தீவிரவாத தாக்குதல் அல்லவென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கழிவறையிலிருந்து சிசு சடலமாக மீட்பு

தணமல்வில வைத்தியசாலை ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த வைத்தியசாலையின் கழிவறையில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண் வயிற்று வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் இடத்தில் இருந்து இரத்தம் வெளியேறுதல் காரணமாக சிகிச்சை பெற வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அவர் வைத்தியசாலையில் இருந்த சிலரின் உதவியுடனேயே இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில், சந்தேகநபர் […]

Continue Reading