நல்லூர் ஆலய பெருவிழாவில் பொருட்களைத் தொலைத்தவர்களுக்கான அறிவிப்பு.

நடைபெற்று முடிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட கைக்கடிகாரம், தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டை, உருத்திராட்ச மாலை, தொலைபேசிகள், வீட்டுத் திறப்புக்கள், மற்றும் சில கைப்பைகள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டு இன்றுவரை உரிமை கோரப்படாத நிலையிலுள்ளது. இவ்வாறு பொருட்களைத் தவறவிட்ட உரிமையாளர்கள் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் இன்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

நல்லூர் முருகனைச் சூழ்ந்த 7 லட்சம் பக்தர்கள்

யாழ். நல்லூர் ஆலயத்தின் தேர்த் உற்சவத்தின் போது இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லூர் திருவிழா இடம்பெற்ற காலப்பகுதியில் சுமார் ஏழு இலட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் கலந்து கொண்டதாகவும், நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பெருமளவு வெளிநாட்டு பக்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த பெருந்தொகை பக்தர்களால், யாழ். நல்லூர்ப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக யாழ். […]

Continue Reading

நல்லூரானுக்கு தேர் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வெகுசிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், 24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது. தேரேறி வந்து பக்தர்களைக் காத்தருளும் நல்லைக் கந்தனைக் காண நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர். மேலும், வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளதுடன், நாளைய தினம் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Continue Reading

நல்லூரில் பக்தர்களுக்கான அறிவுறுத்தல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டுத் தேர், தீர்த்தோற்சவ நாட்களில் தூக்குக் காவடி அல்லது பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரும்பும் அடியார்களுக்கு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் முக்கிய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தெரிவித்துள்ளதாவது, இம்முறை நல்லூர் கோவில் வடக்கு வீதியூடாக துர்க்காமணி மண்டபத்தையடைந்து வடக்கு வீதியில் குபேர கோபுர வாசலையடைந்து அங்கு நேர்த்தியை முடிவுறுத்துமாறும், பின்னர் தூக்குக்காவடி அல்லது பறவைக்காவடியுடன் வந்த வாகனம் நல்லூர் […]

Continue Reading