நல்லூரில் வாகன பாதுகாப்பு நிலையங்களில் அதிக கட்டணம் அறவீடு

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் பெரும்பாலானவற்றில் அதிக கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஐந்து ரூபாவும், மோட்டார் சைக்கிள்களுக்கு பத்து ரூபாவும் கட்டணமாக அறவிடப்பட வேண்டுமென யாழ். மாநகர சபை குறித்த பாதுகாப்பு நிலைய உரிமையாளர்களை அறிவுறுத்தியிருந்த போதிலும், அதனையும் மீறி தேர்த் திருவிழாவின் போதும் தீர்த்தத் திருவிழாவின் போதும் பல்வேறு வாகன தரிப்பிட நிலையங்களில் […]

Continue Reading

நல்லூரானுக்கு திருக்கார்த்திகை திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று மாலை விமர்சையாக இடம்பெற்றது. குறித்த ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி விமர்சையாக இடம்பெற்று வருகிறது. ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ குமரகுருபர சிவாச்சாரியார்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருக்கார்த்திகைத் திருவிழாவை நடாத்திவைத்தனர். அலங்காரக் கந்தனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் என்பன வசந்த மண்டபத்தில் இடம்பெற்று அங்கிருந்து வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி உள்வீதி வலம்வந்து வெளிவீதியில் மயில், மற்றும் அன்ன வாகனத்தில் கார்த்திகை […]

Continue Reading

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் இறுதிக் கிரியைகள் இன்று

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று (26) இடம்பெறவுள்ளன. இறுதிக் கிரியைகள்அ வரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு நாட்டிலுள்ள பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமசந்திரஇ யாழ். நல்லூர் வீதியில் கடந்த […]

Continue Reading

வெலிக்கடைச் சிறை படுகொலையின் 34ஆம் ஆண்டு நிணைவு!

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் (25) மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வட.மாகாண மகளீர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அ.புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டம் மற்றும் […]

Continue Reading

நல்லூர் தாக்குதலுக்கு வவுனியா மன்னாரில் கண்டணம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு வவுனியா மன்றும் மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) வவுனியாவில் அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி பஸார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்துஇ பின்பு அங்கிருந்து […]

Continue Reading

“மச்சான் சவால் விட்டான் நான் சுட்டேன்” என சந்தேக நபர் வாக்கு மூலம்!

முடிந்தால் சுடுமாறு மச்சான் சவால் விட்டான் நான் சுட்டேன் என்று யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருக்கும் நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணமான பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார். நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் உந்தப் பொலிஸை உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். அதனாலேயே தாம் சுட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக […]

Continue Reading

வெளியானது நல்லூர் பிரகடனம்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவிக்கக்கோரி 12 தீர்மானங்களை கொண்ட ´நல்லூர் பிரகடனம்´ செய்யப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் காணி உரிமையை வென்றெடுப்பதற்கான மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் 12 கோரிக்கைகள் அடங்கியதாக தமது நல்லூர் பிரகடனத்தை இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக செய்துள்ளது. மாலை 3.30 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக கூடிய மக்கள், சமய வழிபாடுகளை மேற்கொண்டதுடன், தமது பிரகடனத்தை மேற்கொண்டனர். குறித்த […]

Continue Reading