நாமல் ராஜபக்ஷ விரைவில் கைது?

தன்னை மீண்டும் கைது செய்யும் முயற்சி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற அரசியல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்வதாகவும், தாஜுதீனின் கொலை விவகாரம் தன்னுடைய தம்பியின் காதலியிடமிருந்து ஆரம்பமாகி தனது அம்மா வரை வந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, ராஜபக்ஷக்களுக்கு சொந்தமான 20 காணிகள் உறுதிகளுடன் இருப்பது தொடர்பில் தன்னிடம் தகவல்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு இருந்தால் கொண்டு வருமாறு […]

Continue Reading

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வோம் – நாமல்

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்த தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நாட்டை கட்டியெழுப்புவதற்கு புதிய கட்சி ஒன்று தேவை என்பது போல் புதிய அரசாங்கம் ஒன்றும் தேவை எனவும், அவ்வாறு இல்லையேல் அடுத்த தலைமுறையினர் இந்த நாட்டில் வாழ்வது பெரும் சாபமாகி விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மாற்ற முடியாதது – நாமல்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை மீண்டும் மாற்ற முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், சில தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற எவராலும் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.    

Continue Reading

நாமலுக்கு பிணை அனுமதி

நிதி மோசடி தொடர்பிலான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று பிறிதொரு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், 30 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading