பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவினை டெல்லி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இராணுவ அமைச்சகத்தின் விமானப்படை அலுவலகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் இராணுவ அமைச்சகத்தின் அதிகாரியான மஞ்சுநாதா இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார். இதில் ஊழல் தொடர்பில் பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையினால் பிரதமருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் மனுவில் கோரப்பட்டது. டெல்லி தனி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நேற்றைய […]

Continue Reading

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இலங்கையில் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் உயிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும், முதல் கப்பல் கொழும்பை சென்றடைந்துள்ளதுடன், மற்றைய கப்பல் இன்று புறப்படுவதாகவும் இந்தியப் பிரதமர் தனது டுவிட்டர் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கை வந்தடைந்தார் மோடி (Photo)

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாலை 5.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும் சர்வதேச வெசக்தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்துள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்வதுடன், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இலங்கை வருகிறார் மோடி

இலங்கையில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு இன்று (11) மாலை வருகை தரவுள்ளார். விஷேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மாலை 6.00 மணிக்கு வந்தடையும் அவரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்கும் அதேவேளை, விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பும், இராணுவ மரியாதை அணிவகுப்பும் வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர், கங்காராம விகாரையில் நடைபெறும் […]

Continue Reading

இலங்கையில் கால் பதிக்கவுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாக, குறித்த வெசாக் தினம் அடுத்த மாதம் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Continue Reading