நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை

மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசாங்கம் கையேற்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் வரைபுத்திட்டமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதற்கான பிரேரணையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டு, அதன் நிர்வாகம் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கிடையே மருத்துவப் பட்டப்படிப்பு தொடர்பான தரம் மற்றும் விதிமுறைகள் தொடர்பான சட்டமூலம் ஒன்றும் விரைவில் நாடாளுமன்றத்தில் […]

Continue Reading

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இலவச சிகிச்சை

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இலவச மருத்துவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைய, குறித்த வைத்தியசாலைக்கு நிர்வாகக் குழுவை நியமிக்க அனுமதி கிடைத்தமைக்கு அமைவாக, இதன் புதிய தலைவராக வைத்தியர் அஜித் மென்டிஸ் செயற்படுவதுடன், பணிப்பாளர் நாயகமாக ரியல் அட்மிரல் என்.ஈ.டப்ளியூ.ஜெயசேகர பணியாற்றுகிறார். இந்த வைத்தியசாலை ஊடாக அனைத்து நோயாளர்களுக்கும் தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், இதற்குத் தேவையான மருந்துகள் அனைத்தும் நேற்று மாலை […]

Continue Reading