பொருளாதார விடயங்கள் அரசியல் தீர்வுகளை பெறமுடியாமல் செய்யும்!

பொருளாதார ரீதியிலான விடயங்களை பெற்றுவிட்டால் அரசியல் தீர்வுகளை பெறமுடியாமல் போவதற்கு இடமுண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உடனான நேற்றைய சந்திப்பில் அவர் இதளை தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியிலான தீர்வினை எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் பலவீனமான இடத்திற்கே கொண்டு செல்லும். அது எந்த வகையிலும் அரசியல் ரீதியான நிலைமைகளை சீராக்காது எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு […]

Continue Reading

வடமாகாண இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட வேண்டும் – விசாரணைக் குழு அறிக்கை

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்களும் அவர்களுக்கு உதவிய அமைச்சுக்களின் செயலாளர்களும் தற்போது வகிக்கும் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டுமென விசாரணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள், அவை தொடர்பில் பெறப்பட்ட வாய்மூல மற்றும் ஆவண சான்றுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விசாரணைக்குழுவினது களப்பரிசோதனையில் பெறப்பட்ட தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா ஆகியோரின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. […]

Continue Reading