வடக்கு, வடமேல் மாகாணங்களை வாட்டும் வெப்பம்

நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, வடக்கு, வடமேல் மாகாணங்களில் 268,376 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 19,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், நாடளாவிய ரீதியிலுள்ள 20 மாவட்டங்களில், 369,354 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 70 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களிலுமுள்ள 07 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் […]

Continue Reading

வடக்கின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டும்! -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்-

போருக்குப் பின்னர் மீண்டெழுந்து வருகின்ற வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டி இருப்பதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எல்லாவற்றிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அபிவிருத்திக்கு வேண்டிய நிதி மூலங்களை பெற்றுக் கொள்ளல், அவற்றை முறையாக செலவு செய்தல், திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல், என்பன […]

Continue Reading

வெள்ளத்தால் தெற்கும் வரட்சியால் வடக்கும் கடும் பாதிப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் தெற்கிலுள்ள பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில் வரட்சியால் பல குடும்பங்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 04 இலட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 134 கிராம சேவகர் பிரிவுகளின் 35670 குடும்பங்களைச் சேர்ந்த 115020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்திற்கான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் […]

Continue Reading