வடமாகாண சபையில் 20ஆவது திருத்தம்

அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரேதினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று வடமாகாண சபையில் சமர்பிக்கப்படும் நிலையில், இது தொடர்பான விவாதம் இன்று மேற்கொள்ளப்படுவதாக வடமாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது கடினமென வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பொன்னார்வெளியில் சீமெந்து தொழிற்சாலை – மறுப்புத் தெரிவிக்கும் தவநாதன்

கிளிநொச்சி, பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார். வடமாகாணசபையின் 101ஆவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்த போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் வளங்கள் சூறையாடப்படுவது தொடர்பான பிரேரணை ஒன்றை மாகா ணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபைக்கு முன்மொழிந்திருந்தார். குறித்த பிரேரணை தொடர்பாக உரையாற்றும்போது அமைச்சர் அனந்தி சசிதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் […]

Continue Reading

வடமாகாண சபை உறுப்பினரானார் ஜெயசேகரம்

வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மானிப்பாயிலுள்ள யாழ். வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று மாலை இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னதாக, அப்பதவியில் இருந்த ரெலோ அமைப்பைச் சேர்ந்த மயூரனின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்தே, ஜெயசேகரம் வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜெயசேகரம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு வடமாகாண சபை கடும் கண்டனம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (22.07.2017) சனிக்கிழமை மாலை யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியை வடக்கு மாகாண சபை வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்ற முயன்ற அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு வடக்கு மாகாண சபை சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நீண்டகாலமாக நீதிபதி இளஞ்செழியன் அவர்களது […]

Continue Reading

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. பௌத்த பிக்கு ஒருவரை அவதூறாகப் பேசினார் எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக கொழும்பிற்கு வருமாறும் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணைக்காக கொழும்புக்கு வருவதற்குத் தாம் தயாராக இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். விசாரணையாளர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள் அவர்களுக்கு […]

Continue Reading

ஒரு வாரத்தினுள் தீர்வை எட்டுமாம் வடக்கு..

வடக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பிற்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவ்வார இறுதிக்குள் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் சர்ச்சைக்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படலாம் […]

Continue Reading

வடக்கின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டும்! -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்-

போருக்குப் பின்னர் மீண்டெழுந்து வருகின்ற வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டி இருப்பதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எல்லாவற்றிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அபிவிருத்திக்கு வேண்டிய நிதி மூலங்களை பெற்றுக் கொள்ளல், அவற்றை முறையாக செலவு செய்தல், திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல், என்பன […]

Continue Reading

வடக்கு கல்வியமைச்சரை நியமிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை அவசியம் – ஸ்ரீதரன்

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர், வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன் என்பது தங்களுக்குத் தெரியும். தொடர்ந்து […]

Continue Reading

கிரிக்கெட் போட்டி நடத்தியது வடமாகாண சபை – ஆளுனர் கூரே

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை, கிரிக்கெட் போட்டி போன்று இருந்ததென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றன. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், 30 வருடகால போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில், இவ்வாறான குழப்பநிலைகள் ஏற்பட்டதுடன் […]

Continue Reading

எதிர்க்கட்சித் தலைவர் – வடமாகாண முதலமைச்சருக்கிடையிலான சமரசத்தை ஏற்கிறோம் – தமிழரசுக் கட்சி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சமரசத்தை இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்காக செயற்பட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பின் பின்னர் மாவை சேனாதிராஜா ஊடங்களுக்குக் […]

Continue Reading

முதலமைச்சரை ஆதரித்து கையெழுத்து வேட்டை

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சியில் கையெழுத்து திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட ஜனநாயக இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை கிளிநொச்சி பொதுச் சந்தை பகுதியில் இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் பலரும் இணைந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக தமது கையெழுத்தை இட்டுள்ளனர். கையொப்பமிட்ட கடிதம் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஜனநாயக இளைஞர் அமைப்பினர் தெரிவித்தனர்.

Continue Reading

வடமாகாண முதலமைச்சர் விவகாரம் – எழுத்துமூலம் தெரியப்படுத்தவில்லை என்கிறார் ஆளுனர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவில்லையென மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தன் தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ள போதிலும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அண்மையில் 21 மாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading